வடக்கு அரியநாயகிபுரத்தில் சப்பர பவனி
வடக்கு அரியநாயகிபுரத்தில் சப்பர பவனி நடந்தது.
திருநெல்வேலி
முக்கூடல்:
முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் சிவன் கோவில் முருகன் சன்னதியில் திருமுருகன் திருச்சபை பாத யாத்திரை குழுவினர் 38-வது ஆண்டாக மாலை அணிந்து விரதம் தொடங்கினர். தொடர்ந்து நேற்று காலையில் கும்பாபிஷேகம், மதியம் அன்னதானம் நடந்தது. மாலையில் திருமுருகன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் புஷ்பாஞ்சலி, பஜனை நடைபெற்றது.
வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணியளவில் பக்தர்கள் வேல்குத்தி, பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்படுகின்றனர். ஏற்பாடுகளை குருசாமி பெருமாள் கம்பர் மற்றும் திருமுருகன் திருச்சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story