காணியம்மன் கோவில் தேரோட்டம்
இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், சாமிக்கு திருக்கல்யாணம், அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது தேர் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை வீசி வழிபட்டனர். கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) தேர் கடை திருவிழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) முனி பிடிக்கும் திருவிழாவும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story