ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோவில் தேரோட்டம்


ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

திருப்புல்லாணியில் பிரசித்தி பெற்ற ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பங்குனி உத்தர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். திருவிழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவிலின் வாசல் அருகே நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் வைக்கப்பட்டார். தொடர்ந்து தேரின் வடம் பிடித்து திவான் பழனிவேல் பாண்டியன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டபடி வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் ரதவீதிகளை சுற்றியபடி தேரானது சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேருக்கு முன்பாக சிலம்பாட்ட கலை குழுவின் லோகு பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றிய படியும், கட்டைக்கால் கம்பு ஆடிய படியும் சென்றனர்.


Next Story