கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம்


கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம்
x

கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம்

தஞ்சாவூர்

ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேைர வடம் பிடித்து இழுத்தனர்.

ராமசாமி கோவில் தேரோட்டம்

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ராமநவமி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராம நவமியையொட்டி உற்சவர் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோர் தேருக்கு எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்ததும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருமஞ்சனம்

இதேபோல் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் சீனிவாசப்பெருமாள், அனுக்ரஹ ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியையொட்டி பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சீதாதேவி, ராமர், லட்சுமணர்,

ஆஞ்சநேயர் சிறப்்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story