சுப்பிரமணியசாமி கோவிலில் தேர் திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் தேர் திருவிழா பந்தக்கால் நடும்நிகழ்ச்சி நடந்தது.
வேலூர்
காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நான்கு நாட்கள் மாசி மாத தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக ஆறுமுகசாமி சமேத வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பூஜை பொருட்களுடன் அர்ச்சகர்கள் மற்றும் தேர் வேலையாட்கள் ஊர்வலமாக சென்று தேருக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து கிராம எல்லை கல்லிற்கு பூஜை செய்த பிறகு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், முக்கிய பிரமுகர்கள், கோவில் அர்ச்சகர்கள் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டனர். அதன்பின்னர் தேர் வேலையாட்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story