பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் தேரோட்டம்

பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் தேரோட்டம்
x

பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் தேரோட்டம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து இரவு பல்லக்கு காட்சியுடன் அய்யனார் கோட்டைக்கு எழுந்தருளல் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Next Story