மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் தேரோட்டம்
மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மீனாட்சி-சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story