அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம்
வடக்கு விஜயநாராயணம் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் பிரசித்தி பெற்ற அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாலை நிலையை அடைந்தது. விழாவையொட்டி ஆதிநாராயணசாமி கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. பரதநாட்டியம், நாதஸ்வரம், இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.