கோவில் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:46 PM GMT)

தேவகோட்டை அருகே வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை அருகே வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம், மாட்டு வண்டி பந்தயம் ஆறாவயல்-கல்லுப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 58 வண்டிகள் கலந்துகொண்டன. முதலில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 2-வது பரிசை வெட்டிவயல் தருண்சுந்தரேசன் வண்டியும், 3-வது பரிசை பீர்க்கலைக்காடு பைசல் மற்றும் வானவரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சண்முகம் வண்டியும் பெற்றது.

நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை காரைக்குடி பாண்டிமுருகன் வண்டியும், 2-வது பரிசை தவிட்டான்பட்டி கண்ணன் வண்டியும், 3-வது பரிசை ஆறாவயல் மெய்யப்பன் வண்டியும் பெற்றது. சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஆலத்துப்பட்டி முனீஸ்வரர் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் மற்றும் கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும், 3-வது பரிசை கோட்டையூர் சுதன் மற்றும் கலிப்புலி காளியம்மன் வண்டியும் பெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பேராட்டுக்கோட்டை மாயழகு மற்றும் பரளி செல்வி வண்டியும், 2-வது பரிசை மாவூர் பிரகன்யாமோகன் வண்டியும், 3-வது பரிசை திருவாப்பாடி ராவுத்தர் வண்டியும் பெற்றது. பின்னர் பெரிய குதிரை மற்றும் சின்ன குதிரை வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நாகூர் பிரவீன் வண்டியும், 2-வது பரிசை மன்னார்குடி விஜய் வண்டியும், 3-வது பரிசை திப்புராஜபுரம் கார்த்திக் வண்டியும் பெற்றது.

சின்ன குதிரை வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை உஞ்சனை புதுவயல் சொர்ணலிங்கம் வண்டியும், 2-வது பரிசை கார்குடி குணா வண்டியும், 3-வது பரிசை ஆறாவயல்புதுகுடியிருப்பு காளிதாஸ் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள், கேடயம் வழங்கப்பட்டது.


Next Story