ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அன்னதான நிகழ்ச்சி
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகில் மாந்தாளி கண்மாயில் உள்ளது தர்ம முனீஸ்வரர் கோவில். இங்கு ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஆடித்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு மாந்தாளி கிராம மக்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதான விழாவில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மாந்தாளி கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story