பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி


பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வள்ளலார் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

வள்ளலார் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு அன்னதானம்

கிருஷ்ணகிரி அடுத்த கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சாமி கோவில் சார்பில், கிருஷ்ணகிரியில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளையொட்டி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். துணை ஆணையர் குமரேசன் வரவேற்றார்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், வள்ளல் பெருமானாரின் 200-வது பிறந்த நாளையொட்டி 2022 அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் எனவும், தர்மச்சாலையை தொடங்கி வைத்து, பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்கிய வள்ளலாரின் பெருமையை போற்றும் விதமாக கோவில்களில் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் எனவும் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அகவல் வழிபாடு

அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சாமி கோவில் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வள்ளலார், ஒரே இரவில் எழுதிய அகவல் வழிபாடு வள்ளலார் ஆன்மிக அன்பர்களால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பரிதாநவாப், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலாஜி, வேலுமணி, முன்னாள் கவுன்சிலர் அஸ்லம், செயல் அலுவலர் சித்ரா, ஆய்வாளர் ராமமூர்த்தி, தனி தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story