பொதுமக்களுக்கு அன்னதானம்


பொதுமக்களுக்கு அன்னதானம்
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி வடமதுரையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ.வின் வழிகாட்டுதல்படி அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.பி.பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பழனிசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் லட்சுமணன் (வடமதுரை கிழக்கு), பழனியம்மாள் (வேடசந்தூர் கிழக்கு), நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் (வடமதுரை), பாபுசேட் (வேடசந்தூர்), அறிவாளி (எரியோடு), ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சி சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் மலர்கொடி அம்மையப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story