சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா
கோத்தகிரியில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா நடைபெற்றது.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி கடைவீதி பகுதியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 11-ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. 10.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக பூஜையும், மதியம் 12.30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு உற்சவ மூர்த்தி மற்றும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உற்சவ மூர்த்தியையும், சவுடேஸ்வரி அம்மனையும் வழிபட்டு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
Related Tags :
Next Story