கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசோதனை
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் தொடங்கியது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிருப்பு மருத்துவர் செல்வி மற்றும் மருத்துவக் குழுவினர் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்தனர். முதல் நாளில் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஏகாம்பரம், துணை பதிவாளர் ராஜதுரை, கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story