கஞ்சா கடத்தி வருவதை தடுக்க சோதனை சாவடிகளை வலுப்படுத்த வேண்டும்


கஞ்சா கடத்தி வருவதை தடுக்க சோதனை சாவடிகளை வலுப்படுத்த வேண்டும்
x

அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதை தடுக்க சோதனை சாவடிகளை வலுப்படுபத்த வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.

திருப்பத்தூர்

அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதை தடுக்க சோதனை சாவடிகளை வலுப்படுபத்த வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூர் அருகே உள்ள கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, மாணவர்கள் உடல்நலன் மற்றும் மனநலன் காக்க சிறப்பு விழிப்புணர்வு வார விழா, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

வலுப்படுத்த வேண்டும்

போதை பொருள் பயன்படுத்துவதினால் உங்கள் சிந்தனையை அழிக்கும். போதைபொருள் பயன்பாடு மற்ற மாநிலங்களை விட நமது மாநிலத்தில் குறைவாகத்தான் உள்ளது. அதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அதற்கு மாநில எல்லைகளில் சோதனை சாவடிகளை வலுப்படுத்தி செயல்பட வேண்டும். மலையடிவாரப் பகுதிகள், மறைவான இடங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், இதர பயிர்களுக்கு நடுரில் கஞ்சா பயிர்யிடுவதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால் மலையை ஒட்டி அமைந்திருக்கும் விவசாய நிலங்களில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைகள் செய்ய வேண்டும்.

மன அழுத்தம்

போதைப் பொருள் பயன்படுத்துவதனால் மன அழுத்தம், நிம்மதியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் போதைப் பொருள் வாங்குவதற்கு தன்னிடம் உள்ள அனைத்து பொருட்களையும் விற்று போதைப்பொருள் வாங்குவதற்கான சூழல் ஏற்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கப்படுவார்கள்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருளை தடுக்க வேண்டும். போதை பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் வகையில் ஆலோசனை வழங்கி அவர்களை அதிலிருந்து மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், இணை இயக்குனர் மாரிமுத்து, கல்லூரி முதல்வர் பாமா, பேராசிரியர்கள் ஹரிபிரபாகரன், பல்லவன், கலைச்செல்வி, பிரபாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story