செல்லமுத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


செல்லமுத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே செல்லமுத்து‌ மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே தேவூரில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் வண்ண மலர்களை பூத்தட்டில் ஏந்தியவாறு திருவாசல் குளக்கரையில் இருந்்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை), செடில் உற்சவம் 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story