செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியது
செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியது
அதிராம்பட்டினம்
அதிராம்பட்டினம் அருகே தொடர் மழையால் செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செல்லிக்குறிச்சி ஏரி
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது.
இந்த ஏரி 5 கிலோமீட்டர் தூரமும், 320 ஏக்கர் பரப்பளவும் கொண்டதும் ஆகும். இந்த ஏரி நிரப்பும் போது கடல் போல் காட்சி அளிக்கும். கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு காவிரி நீர் வந்த நிலையிலும் இந்த செல்லிக்குறிச்சி ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டினால் இந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி ஆகிய பகுதிகள் பயன்பெறும்.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேலும் பட்டுக்கோட்டை நகர பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து கோடை காலங்களிலும் குடிநீர் பற்றாக்குறை இருக்காது. கடந்த சில நாட்களாக பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக செல்லிக்குறிச்சி ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.