செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழா
ஒட்டநத்தம் செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் செல்லியம்மன், அக்னி மாரியம்மன், மாகாளியம்மன், கருப்பசாமி கோவில்களின் சித்திரை திருவிழா கடந்த 29-ந்தேதி இரவில் வில்லிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலையில் 108 திருவிளக்கு பூஜை, இரவில் ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலையில் குடியழைப்பு, காப்பு கட்டுதல், நையாண்டி மேளம், கணியான் மகுட ஆட்டம் முழங்க அம்மன் அழைக்கப்பட்டு, அக்னி சட்டி மற்றும் கும்பம் ஊர் சுற்றி வந்தது. மாைலயில் மாக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு உற்சவர் அம்மனின் ஊஞ்சல் சேவை, 6 மணிக்கு அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரங்கள் செய்து கண் திறத்தல், இரவு 12 மணிக்கு உற்சவர் செல்லியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 3-ந் தேதி (புதன்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.