செல்லியம்மன் கோவில் மது எடுப்பு விழா


செல்லியம்மன் கோவில் மது எடுப்பு விழா
x

செல்லியம்மன் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே குப்பக்குடியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அம்மை நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஆடிமாத மது எடுப்பு விழா நேற்று நடைபெற்றது. செங்காட்டு நாட்டை சேர்ந்தவர்கள் 6 கிராமங்களிலிருந்து மதுகுடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் மதுகுடங்களை எடுத்து கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மது குடங்களில் வைத்து கொண்டு வந்த பாளையை கோவில் குளக்கரையில் போட்டு விட்டு, நவதானியங்களை கோவிலின் சன்னதியில் கொட்டினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story