ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்
பேராவூரணியில் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேராவூரணி;
பேராவூரணியில் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரசாயனம்
பேராவூரணி பகுதி பழக்கடைகளில், ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு வாட்ஸ் அப்பில் ஒருவர் புகார் மனு அனுப்பினார்.இதைத்தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா உத்தரவின் பேரில், பேராவூரணியில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பறிமுதல்
ஆய்வில் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள், மாம்பழங்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன பழங்கள் என 121 கிலோ பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ஐந்து கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நடவடிக்கை
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:- "வாட்ஸ்அப் புகாரின் பேரில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதி, பழக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, இதில் குறைகள் கண்டறியப்பட்டு, ஐந்து கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.இதைப்போல பழரசம் விற்பனை கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரசாயனம் தடவிய பழங்களை உண்பவர்களுக்கு வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். எனவே விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.