சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்


சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்
x

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தனது மனைவியுடன் நேற்று வந்தார்.

அவரை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்வரன் குமார் ஜடாவத், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருக்கோவிலூர் தாசில்தார் குமரன், நகராட்சி ஆணையர் கீதா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கோவில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெய்சங்கர், மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, குற்றவியல் தலைமை நீதிபதி புஷ்பராணி, திருக்கோவிலூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மாவதி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக கோவிலுக்கு வந்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவரும், வக்கீல் சங்க முன்னாள் தலைவருமான ராயல் எஸ்.அன்பு, வக்கீல் சங்க முன்னாள் தலைவரும், முன்னாள் அரசு வக்கீலுமான எஸ்.ரஜினிகாந்த், வக்கீல் சங்க செயலாளர் சுவிஜி.சரவணகுமார், தலைவர் ஆனந்தன், துணைத்தலைவர் எஸ்.கே. ராஜ்குமார், அரசு வக்கீல் சங்கரன், முன்னாள் தலைவர் வீரா.செல்வராஜ், வக்கீல்கள் ராஜேஷ், கோடீஸ்வரன், ராஜாராமன், செந்தில் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


Next Story