சென்னை பெருநகர் வளர்ச்சி குழும ஆய்வு கூட்டம்
சென்னை பெருநகர் வளர்ச்சி குழும ஆய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள் கணக்கீடு செய்வதற்கான இறுதிக்கட்ட தேதியை நிர்ணயிப்பது தொடர்பாகவும், மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை யில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு (சி.எம்.டி.ஏ.) அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, முதன்மைச் செயல் அலுவலர் கவிதா ராமு, தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.