சென்னை- சாம்பல்பூர் சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை- சாம்பல்பூர் இடையே சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதை குறைப்பதற்காக, தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரெயில் இன்று (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (வியாழன்) இரவு 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் 23-ம் தேதி இரவு 11.30க்கு சாம்பல்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக சனிக்கிழமை காலை 5 மணிக்கு சாம்பல்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலில் 13 பொதுப்பெட்டிகள், 3 இருக்கை வசதி பெட்டிகள், 1 லக்கேஜ் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story