பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலி


பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
x

நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது, பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது, பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலியானார்.

சென்னை வாலிபர்

சென்னை பெரவலூர் வெற்றிநகரைச் சேர்ந்தவர் லட்சுமண மூர்த்தி. இவரது மகன் ஸ்ரீராம் (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தன்னுடன் வேைல பார்க்கும் நண்பர்கள் சிலருடன் நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தார். அங்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட தலையணையில் தடையை மீறி அனைவரும் நேற்று குளிக்கச் சென்றனர்.

தண்ணீரில் மூழ்கி சாவு

குளித்துக் கொண்டு இருக்கும் போது, ஸ்ரீராம் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்றினார்கள். அப்போது, அவர் பேச்சு மூச்சின்றி காணப்பட்டார். இதையடுத்து அவரை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ரீராம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story