பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்கள்


பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்கள்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

திண்டுக்கல்

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்கின்றனர். இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கி தானாக உதிர்ந்து விழுகின்றன, இந்த வகை மலர்களில் இருந்து தேன்சிட்டு குருவிகளும், தேனீக்களும் தேன் எடுக்கும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.


Next Story