அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி
x

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல் 15-ந்தேதி வரை செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் மட்டும் போட்டிகள் நடத்தப்படும்.

6 முதல் 8 வரை மற்றும் 9,10,11,12 ஆகிய பிரிவுகளில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்படும். அந்த வட்டாரத்துக்கு உட்பட்ட பள்ளியில் வருகிற 20-ந்தேதி வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடைபெறுகிறது.

வட்டார அளவில் முதல் 3 இடங்களை பிடித்த 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ மற்றும் மாணவிகள் தனித்தனியே மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வருகிற 25-ந்தேதி நடைபெறும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் தலா 2 பேர் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் தலா 4 பேர் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிட செல்வார்கள்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

----


Next Story