சதுரங்கப் போட்டி


சதுரங்கப் போட்டி
x

தென்காசியில் சதுரங்கப் போட்டி நடந்தது.

தென்காசி

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பள்ளியின் நிறுவனர் மறைந்த இசக்கி பாண்டியன்- சந்திர காந்திமதி அம்மாள் நினைவாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதற்கட்டமாக தென்காசி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 360 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 5 வகையான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழங்கினார். பள்ளி முதல்வர் மோனிகா டி சோசா, செயல் அலுவலர் ராம்குமார், உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன், ரவி, சோபியா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பயிற்சியாளர் அருண் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கணக்கப்பிள்ளைவலசை மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பரிசு கிடைத்தது.



Next Story