செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி


செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி
x

திட்டக்குடியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் சி.வெ.கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர்

விருத்தாசலம்:

திட்டக்குடியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். வதிஷ்டபுரத்தில் தொடங்கிய பேரணி, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று திட்டக்குடி பஸ் நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கு நடந்த மாணவர்களுக்கான செஸ் போட்டியை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி, திட்டக்குடி தாசித்தார் கார்த்திக், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், ஆசிரியர் கொளஞ்சி, நகர மன்ற தலைவர் வெண்ணிலா, தகவல் தொழில் நுட்ப அணி விக்னேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு தாசில்தார் தனபதி தலைமை தாங்கினார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் முன்னிலை வகித்தார். இதில் இன்பேன்ட் பள்ளி தாளாளர் விஜயகுமாரி, ஆசிரியர்கள், மாணவர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story