சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: மயிலாடுதுறையில், சைக்கிள் ஊர்வலம் கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மயிலாடுதுறையில் சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மயிலாடுதுறையில் சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது. இதை பிரபலப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று மயிலாடுதுறையில் மாணவர்களின் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் பங்கேற்பு
சின்னக்கடை வீதி, காமராஜர் சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட பல்வேறு வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, செஸ் ஒலிம்பியாட் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.