செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு ஊர்வலம்
செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று புதுக்கோட்டையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகராட்சி அலுவலகம், அண்ணா சிலை, நீதிமன்ற வளாகம், புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட விளையாட்டரங்கத்தை வந்தடைந்தது. புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில், புதிய பஸ் நிலைய வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி ஆணையர் நாகராஜன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன் உள்பட மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.