செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
கடலூர்
44-வது செஸ் ஒலிம்பியாட்- 2022 போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூரில் நேற்று பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story