சதுரங்க போட்டி: அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மாணவர் கிஷோர் முதலிடமும், சிவக்குமார் 3-ம் இடமும், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் மாணவி பவித்ரா 3-ம் இடமும் பெற்றனர். ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற இந்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி, ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.