செட்டியாபத்து தேரிக்குடியிருப்பு கோவிலில் குவிந்த பக்தர்கள்
செட்டியாபத்து தேரிக்குடியிருப்பு கோவிலில் குவிந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குவிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு காலையில் ஏராளமான பக்தர்கள் வேன், மினிலாரி, கார் பஸ் போன்ற வாகனங்கள் குடும்பத்துடன் வந்து குவிந்திருந்தனர். காது குத்துதல், முடிகாணிக்கை செலுத்துதல் போன்ற நேர்த்திகடனை பக்தர்கள் செலுத்தினர். சுவாமிக்கு ஆடு, கோழிகளை படையல் செய்து வழிபட்டனர். இதைப் போல காயாமொழி அருகில் உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்து காணப்பட்டனர். காது குத்துதல், மொட்டை போடுதல் போன்ற வேண்டுதல்களை செய்து, சுவாமிக்கு ஆடு, கோழி படையல் போட்டு வழிபட்டனர்
Related Tags :
Next Story