கெட்டுப்போன இறைச்சி சாப்பிட்ட சத்தீஷ்கர் மாநில தொழிலாளி சாவு
கெட்டுப்போன இறைச்சி சாப்பிட்ட சத்தீஷ்கர் மாநில தொழிலாளி இறந்தார்.
ஆரணி
கெட்டுப்போன இறைச்சி சாப்பிட்ட சத்தீஷ்கர் மாநில தொழிலாளி இறந்தார்.
சத்தீஷ்கர் மாநிலம் ரேவியூட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்சார் (வயது 22). இவர் ஆரணியை அடுத்த குருமந்தாங்கள் கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருடைய செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த 20 பேர் பணியாற்றுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இறைச்சி சாப்பிட்ட நிலையில் உடல் உபாதை ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் முகமது சம்சார் சேர்க்கப்பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் முகமது சம்சார் சாப்பிட்ட இறைச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு சமைத்தது என்பதும் கெட்டுப்போனதால் உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.