நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்யலாம் - வேளாண்மை உதவி இயக்குனர்

நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்யலாம் - வேளாண்மை உதவி இயக்குனர்
x

நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்யலாம் என பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி அறிவுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர்

நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்யலாம் என பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சம்பா நெல் சாகுபடி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின்னர் தற்போது பெய்துள்ள கனமழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்யலாம்.

இதற்கான நெல் தரிசில் உளுந்து சாகுபடி இயக்கத்தின் கீழ் உளுந்து சாகுபடி செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்யலாம்.

உளுந்து விதைகள்

வம்பன் 8, வம்பன் 11 ரக உளுந்து விதைகள் பட்டுக்கோட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உளுந்து விதை தேவைப்படும் விவசாயிகள் விதை கிராமத் திட்டத்தின் கீழ் கிலோவிற்கு 48 ரூபாய் மானியத்திலும், நெல் தரிசில் உளுந்து சாகுபடி இயக்கத்தின் கீழ் கிலோவிற்கு 50 ரூபாய் மானியத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story