சிதம்பரம்: ரெயிலில் சிக்கி காலை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்..!


சிதம்பரம்: ரெயிலில் சிக்கி காலை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்..!
x

சிதம்பரம் அருகே ரெயிலில் சிக்கி மருத்துவக் கல்லூரி மாணவர் காலை இழந்துள்ளார்.

சிதம்பரம்,

தமிழகத்தில் ரெயில்கள், பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்தபடியே உள்ளது. இந்த ஆபத்தான பயணத்துக்கு சக மாணவர்களிடம் கிடைக்கும் வரவேற்பு, சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு போன்றவையே தொடர்ந்து மாணவர்கள் தவறு செய்யக் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் கால் ரெயிலில் சிக்கி துண்டானது. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது. இதில் கால் துண்டாகி வலியால் அலறி துடித்தார்.

உடனே ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அந்த மாணவரை மீட்டு, துண்டான காலோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரெயிலில் சிக்கி கல்லூரி மாணவர் காலை இழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


Next Story