சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.

கடலூர்

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் புறவழிச்சாலையில் சிதம்பரம் அரசு கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வருவதற்கு போதிய அளவிலான பஸ்கள் இல்லை. இதனால் கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இருந்து செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவா்கள் கோரிக்வை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரியில், வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் வழியாக கூடுதல் பஸ் வசதி இயக்கக்கோரி கோஷம் எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story