சிதம்பரம் நகர வீதிகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் வாகன நிறுத்தும் இடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வருமா?


சிதம்பரம் நகர வீதிகளில்  தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்  வாகன நிறுத்தும் இடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வருமா?
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நகரின் 4 நான்கு முக்கிய வீதிகளிலும் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாகன நிறுத்தும் இடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வருமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இது தவிர பழமை வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமும் இங்குதான் இருக்கிறது. இதன் காரணமாக சிதம்பரம் நகருக்கு தமிழகம் மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்தும் மாணவர்கள் படிப்பதற்காக வருகின்றனர். நடராஜர் கோவிலை காண சுற்றுலா பயணிகளும், சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களும் வருகிறார்கள்.

நடராஜர் கோவிலுக்கு செல்ல 4 முக்கிய வீதிகள் உள்ளன. இதில் பக்தர்கள் கீழ சன்னதி வழியாகவே நடராஜர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

நடராஜரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாகனங்களில் வருகிறார்கள். ஆனால் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லாததால் சிதம்பரத்தின் 4 முக்கிய வீதிகளிலும் சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தி வைத்து விட்டு செல்கிறார்கள். இதனால் 4 வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் சாலையில் வரிசையாக அணிவகுத்து நிற்பது வாடிக்கையாகிவிட்டது. விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இங்குள்ள வீதிகள் வழியாக சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இது போன்ற காலத்தில் ஆத்திர அவசரத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சிதம்பரம் நகரின் 4 வீதிகளிலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தரமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இட வசதி


Next Story