கொள்ளிடம் ஆற்றங்கரையில் பொதுப்பணித்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு


கொள்ளிடம் ஆற்றங்கரையில்   பொதுப்பணித்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
x

கொள்ளிடம் ஆற்றங்கரையில் பொதுப்பணித்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதி ஆற்று வெள்ளம் வேகமாக மோதி திரும்பும் பகுதியாகும். இங்கு கடந்த 2018-ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று உள்ளன. அங்கு மணல் மூட்டைகள் மற்றும் மண் கொண்டு கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் அளக்குடி கொள்ளிடம் ஆற்றங்கரையில் பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காட்டூரில் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியையும் பார்வையிட்டார். அப்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story