வேங்கைவயல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும்-எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை


வேங்கைவயல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும்-எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை
x

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை,

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமம் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்துவரும் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வேங்கைவயல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் கூறிய அதேவேளையில்தான், பாதிக்கப்பட்ட சமூக மக்களை குற்றவாளியாக்கும் முயற்சிகளும் நடைபெறுவது வேதனையளிக்கிறது.

தமிழக முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். முதல்-அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து, நீதிக்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story