நகராட்சி பள்ளிகளில் முதல்அமைச்சரின்காலை உணவு திட்டம்:கலெக்டர்செந்தில்ராஜ் ஆய்வு


தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியிலுள்ள நகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். குழந்தைகளிடம் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியிலுள்ள நகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். குழந்தைகளிடம் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

கலெக்டர் ஆய்வு

கோவில்பட்டி பங்களா தெருவில் இயங்கி வரும் நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அந்த பள்ளிக்கு வந்தார். அப்போது பள்ளியில் மாணவ, மாணவியர் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு சென்ற கலெக்டர், உணவின் தரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். சிறிதளவு உணவை எடுத்து அவர் ருசிபார்த்தார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அங்கிருந்து புது ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்ற கலெக்டர், அங்குள்ள சமையல் கூடத்திற்கு சென்றார். அங்கு சுகாதாரம் குறித்தும், உணவு சமைக்கும் முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகள், ஆசிரியர்கள், சமையலர்களிடம் குழந்தைகளுக்கு தரமான உணவை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியின் போது கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, நகராட்சி ஆணையர் ராஜாராம், தாசில்தார் சுசிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story