முதல்-அமைச்சர் இன்று வருகை:மதுரையில் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று புதுராம்நாட் ரோடு, சி.எம்.ஆர். ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜனின் உருவ சிலையை திறந்து வைக்க வருகை தருகிறார். அதையொட்டி நகரில் இன்று மாலை முதல் இரவு வரை பஸ்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் மற்றும் இதர வாகனங்களின் சாலை போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி விழாவிற்கு வரக்கூடிய சாலைகளான அனுப்பானடி ரோடு சந்திப்பு முதல் புதுராம்நாட் ரோடு, சி.எம்.ஆர். ரோடு, செயின்ட் மேரீஸ் சந்திப்பு முதல் பழைய குயவர் பாளையம் ரோடு, ஓபுளா படித்துறை முதல் சிமெண்டு ரோடு முனிச்சாலை ரோடு சந்திப்பு ஆகிய சாலைகளின் வாகன போக்குவரத்து காமராஜர் சாலையினை பயன்படுத்தி கீழ்கண்ட வகையில் தங்கள் இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
தெப்பக்குளம்
அனுப்பானடி ரோடு சந்திப்பிலிருந்து புதுராம்நாட் ரோடு மற்றும் சி.எம்.ஆர். ரோடு ஆகிய சாலைகள் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தெப்பக்குளம் 16-கால் மண்டபம் சென்று வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக செல்லலாம். செயின்ட் மேரீஸ் சந்திப்பு மற்றும் சிந்தாமணி ரோட்டிலிருந்து பழைய குயவர்பாளையம் வழியாக தெப்பக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மஹால் ரோடு. கீழவாசல் சந்திப்பு சென்று காமராஜர் சாலை தெப்பக்குளம் நோக்கி செல்லலாம்.
நெல்பேட்டை மற்றும் ஓபுளா படித்துறையிலிருந்து தெப்பக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அம்சவள்ளி சந்திப்பு, கீழவாசல் சந்திப்பு சென்று காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் செல்ல வேண்டும்.
வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்
விழாவிற்கு தெப்பக்குளம் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை வழியாக வரும் வாகனங்கள் முனிச்சாலை சந்திப்பில் ஆட்களை இறக்கிவிட்டு காந்திப்பொட்டல் சந்திப்பில் வலதுபக்கமாக திரும்பி முனிச்சாலை ரோட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தலாம். கீழவாசல் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை வழியாக வரும் வாகனங்கள் முனிச்சாலை சந்திப்பில் ஆட்களை இறக்கிவிட்டு சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி மைதானத்திலும், செயின்ட் மேரீஸ் சந்திப்பு மற்றும் சிந்தாமணி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் அகர்வால் கல்யாண மண்டபம் சந்திப்பில் ஆட்களை இறக்கிவிட்டு பாலரெங்காபுரம் ரோடு வழியாக சென்று சி.எம்.ஆர். ரோட்டில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.
இடையூறாக நிறுத்த வேண்டாம்
அனுப்பானடி சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் புதுராம்நாட் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆட்களை இறக்கி விட்டு அங்கு வாகனங்களை நிறுத்தலாம். விழாவிற்கு வரும் போலீசார் மற்றும் அரசுத்துறை வாகனங்கள் காமராஜர் சாலையில் உள்ள சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளியில் வாகனங்களை நிறுத்தலாம்.
காமராஜர் சாலையில் கீழவாசல் சந்திப்பு முதல் பழைய கணேஷ் தியேட்டர் வரை, பழைய குயவர்பாளையம் சாலையில் செயின்ட்மேரீஸ் சந்திப்பில் இருந்து முனிச்சாலை சந்திப்பு வரை போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.