தலைமை பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையர் ஆய்வு
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே தலைமை பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையர் சைலேஷ்குமார் பதக் தலைமையில் ரெயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே தலைமை பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையர் சைலேஷ்குமார் பதக் தலைமையில் ரெயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையர்
சென்னையில் இருந்து கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சி செல்லும் வழித்தடத்தில் உள்ள முக்கியமான ரெயில் நிலையம் மயிலாடுதுறை ரெயில் நிலையம் ஆகும். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், ரெயில்வே கேட்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள், ரெயில்வே இருப்பு பாதை பாதுகாப்புகள், மின்மயமாக்கப்பட்ட பின்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் குறித்து ரெயில்வே தலைமை பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையர் சைலேஷ் குமார் பதக் ஆய்வு மேற்கொண்டார்.
இவர் தெற்கு மற்றும் தென்மேற்கு ரெயில்வேக்களின் பாதுகாப்பு ஆணையராக பொறுப்பு வகித்து வருகிறார். சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் நேற்று மயிலாடுதுறை வந்த அவருக்கு திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மனிஷ் அகர்வால் மற்றும் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
சிக்னல் செயல்பாடு
தொடர்ந்து ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சிக்னல் அறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.