முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில்  வரவேற்பு
x

திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சருக்குசிறப்பான வரவேற்பு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்ப நண்பரான திருப்பூர் தொழிலதிபர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார். பின்னர் கோவையில் ஓய்வு எடுத்துவிட்டு மாலையில் அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் அவினாசியில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திரளான தொண்டர்கள் சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருந்தார்கள். மாலை 6.45 மணிக்கு அவினாசி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புன்சிரிப்புடன்

கையசைத்தார்

திருப்பூர் வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்ததும், கார் மெதுவாக நகர்ந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையின் இருபுறமும் நின்றிருந்த தொண்டர்களை பார்த்து புன்சிரிப்புடன் கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு பெருமாநல்லூருக்கு சென்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார் காலனி எம்.எஸ்.மணி, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், செந்தூர் முத்து, பி.ஆர்.செந்தில்குமார், தொ.மு.ச. நிர்வாகி ஈ.பி.சரவணன்,திருப்பூர் வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்டநிர்வாகி திலக்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு, முன்னாள் நகர் செயலாளர் சிவபாலன் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

திருமண வரவேற்பு

பின்னர் இரவு 7 மணிக்கு பெருமாநல்லூரில் உள்ளதிருமண வரவேற்பு மகாலுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தினார். அவருடன் துணைவியார் துர்கா ஸ்டாலின் இருந்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, மெய்யநாதன், கயல்விழி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரவு 7.40 மணிக்கு அங்கிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு கோவை சென்றார். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது


Related Tags :
Next Story