முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்றார்
திருப்பூர்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றிய வந்த ரமேஷ் கடந்த மே மாதம் 31-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருவளர்ச்செல்வி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பெற்றுக்கொண்டார்.
கடந்த 2009-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியில் சேர்ந்து 2011-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றினார். தொடர்ந்து வேலூர், காஞ்சீபுரத்தில் முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றியுள்ளார். ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்து வருவதால் அந்த பயிற்சி வகுப்புக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
Next Story