கறிக்கோழிகளும் கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.750 வரை விற்பனை
கறிக்கோழிகளும் கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.750 வரை விற்பனை
குன்னத்தூர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் குன்னத்தூர் வாரச்சந்தையானது நேற்று நடைபெற்றது. குன்னத்தூர் பகுதியில் காடுகள் அதிகம் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிக அளவு ஆடு, மாடு, கோழி, கட்டு சேவல்கள் கறிக்கோழிகளை வளர்த்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை யொட்டி நேற்று நடந்த குன்னத்தூர் வாரச்சந்தையில் அதிக அளவு கறிக்கோழி மற்றும் கட்டு சேவல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. குன்னத்தூர் சந்தையில் கட்டு சேவல் வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, மத்தியபிரதேசம் போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் அதிகளவு வருகை தந்திருந்தார்கள். தங்களுக்கு பிடித்த கட்டு சேவல்களை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி சென்றார்கள். அதேபோல் கறிக்கோழிகளும் கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.750 வரை விற்பனையானது.
------