கறிக்கோழிக்கு சீரான விலை
கறிக்கோழிக்கு சீரான விலை
திருப்பூர்
பல்லடம்
பல்லடம் பகுதியில் பண்ணையாளர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கறிக்கோழி நுகர்வை பொறுத்து விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.. இது குறித்து கறிக்கோழி பண்ணையாளர் ஒருவர் கூறும்போது "கடந்த மாதங்களில் கறிக்கோழி தொழில் சரிவை சந்தித்தது. இதனால் கறிக்கோழி தொழில் சார்ந்த உற்பத்தியாளர்கள், மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கறிக்கோழி வளர்ப்பு தொழில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.கறிக்கோழி கொள்முதல் விலையும் சீராக உள்ளது.என்றார் இந்த நிலையில் நேற்றைய கறிக்கோழி கொள்முதல் விலை கிேலா ரூ.120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கறிக்கோழி சீரான விலையில் இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story