குழந்தைகள் தினவிழா போட்டிகள்
உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தின விழாவையொட்டி உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் மதுமதி ஆலோசனைப்படி, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் நடைபெற்றது. போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியை விஜயா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை தமிழ் ஆசிரியர்கள் வே.சின்னராசு, ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். பள்ளி ஆசிரியர்கள் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர்.
போட்டிகளில் பங்கு பெற்று முதல் 2 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு குழந்தைகள் தின விழாவன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.