குழந்தையும் தெய்வமும் சிறப்பு சொற்பொழிவு


குழந்தையும் தெய்வமும் சிறப்பு சொற்பொழிவு
x

பள்ளி விழாவில் குழந்தையும் தெய்வமும் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

ராணிப்பேட்டை

ஆற்காட்டில் இருந்து செய்யார் செல்லும் சாலையில் தக்கான்குளம் பகுதியில் உள்ள ஸ்மைல்ஸ் இந்தியா வித்யாஷரம் பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான குழந்தையும், தெய்வமும் என்ற தலைப்பில் செவி விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஜி.நந்தகுமார், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர். உழவன் கே.எம்.பாலு, ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் எஸ்.செலின் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சொல்லின் செல்வர் சுகிசிவம் கலந்துகொண்டு குழந்தையும், தெய்வமும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் வட தமிழ்நாடு சபரிமலை அய்யப்பன் சேவா சமாஜம் தலைவர் வி.ஜெயச்சந்திரன், ஜே.சி.ஐ.இ. மணிவண்ணன் மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தாளாளர் ஹரிணி பிரியா நன்றி கூறினார்.


Next Story