குழந்தைகள் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் குழந்தைகள் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவும், ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கமும் இணைந்து குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தின.
கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் எம்.மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.
வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி, காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சுமதி. காட்பாடி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு மேலாளர் விஜயா ஆகியோர் பேசினர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098 மற்றும் 181 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என இன்ஸ்பெக்டர் லட்சுமி அதற்கான அட்டையினை மாணவிகளிடம் வழங்கினார்.
விழாவில் போலீசார், பள்ளியின் 11, 12-ம் வகுப்பு மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.